பயங்கரவாதிக்கு மரண தண்டனை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

பயங்கரவாதிக்கு மரண தண்டனை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

தலைநகர் டெல்லியின் செங்கோட்டை தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று(நவ.3) உறுதி செய்தது.

2000, டிச.22 அன்று பயங்கரவாதிகள் சிலரின் திடீர் தாக்குதலுக்கு டெல்லி செங்கோட்டை ஆளானது. அத்துமீறி செங்கோட்டைக்குள் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டிருந்தவர்களில் முகமது ஆரிஃப் என்பவனுக்கு மரண தண்டனை விதித்து 2007ல் தீர்ப்பானது. ஆரிஃப் உடன் செயல்பட்ட பயங்கரவாதிகளும் தண்டனைக்கு ஆளானார்கள். இவர்களில் ஆரிஃப் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

பாகிஸ்தான் குடிமகன் முறைகேடாக எல்லை தாண்டி வந்ததுடன் இந்தியாவில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதை தீவிரமாக எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஆரிஃபின் நடவடிக்கையை ‘தாய்நாட்டின் மீதான தாக்குதல்’ என்றது. தொடர்ந்து 2011ல் ஆரிஃபின் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்னர் மரண தண்டனைக்கான மேல் முறையீடு மனுக்களை ஓப்பன் கோர்டில் விசாரிப்பது என்ற புதிய முடிவுக்கு உட்பட்டு, 2016ல் மீண்டும் ஆரிஃபின் மேல்முறையீடு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது. நீதிபதிகள் உதய் உமேஷ் லதித் மற்றும் எம்.திரிவேதி ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முகமது ஆர்ஃபின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததன் மூலமாக அவனுக்கான மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in