வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... காலக்கெடு நீட்டிப்பு!

வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... காலக்கெடு நீட்டிப்பு!

நாட்டின் மிக பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா  அதன் அம்ரித் கைலாஷ் சிறப்பு நிரந்தர வைப்புத் தொகை திட்டத்திற்கான கடைசி தேதியை மேலும் நீட்டித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி முதலீட்டாளர்களுக்கு சிறப்பு  வைப்புத்தொகை திட்டம் ஒன்றை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அம்ரித்கைலாஷ் என்ற பெயரிலான அந்த சிறப்பு வைப்புத் தொகை திட்டத்தின் கீழ் வைப்புத்தொகை செலுத்தும் முதலீட்டாளர்களில்  மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டியும், மற்றவர்களுக்கு 7.1 சதவீத வட்டியும் கிடைக்கும். இந்த ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமானது 400 நாட்களில்  முதிர்வு அடையும். 

இந்த ஆண்டு பிப்ரவரி 15 ம் தேதி முதல் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு திட்டம் முதலில் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த திட்டம் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் பல வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் கடைசித் தேதியை மீண்டும் நீட்டித்துள்ளது. இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in