பொங்கல் திருநாளிலும் தமிழகத்தில் நடந்த எஸ்பிஐ வங்கி போட்டித் தேர்வு!

பொங்கல் திருநாளிலும் தமிழகத்தில் நடந்த எஸ்பிஐ வங்கி போட்டித் தேர்வு!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அகில இந்திய அளவில் கிளார்க் பணியிடங்களுக்கு முதன்மைத் தேர்வினை இன்று நடத்தியது. தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையான இன்று, தமிழகத்திலும் எஸ்.பி.ஐ கிளார்க் பணியிடத்திற்கான தேர்வு நடந்தது.

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ கிளார்க் பணியிடத்திற்கான தேர்வை நடத்திவருகிறது. இதில் ஏற்கனவே முதல்நிலைத் தேர்வு நடந்துவிட்ட நிலையில் முதன்மைத் தேர்வு இன்று நடந்தது. முன்னதாக பொங்கல் திருநாளன்று இந்தப் போட்டித் தேர்வை நடத்துவதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் அகில இந்திய அளவில் திட்டமிட்டத் தேர்வு என்பதால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்வுத் தேதியை மாற்றவில்லை.

இந்நிலையில் நாடு முழுவதும் எஸ்.பி.ஐ அறிவித்து இருந்த 5486 கிளார்க் காலிப்பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு இன்று நடந்தது. தமிழகத்திலும் திட்டமிட்டபடி இந்தத் தேர்வு இன்று நடந்தது. தேர்வினை ஒத்திவைக்குமாறு பலகட்டப் போராட்டங்களும் நடந்த நிலையில் அவை கண்டுகொள்ளப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 19 மையங்களில் திட்டமிட்டதுபோல் இந்தத் தேர்வு நடந்தது. இதில் முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்று, முதன்மை தேர்வுக்கு ஹால் டிக்கெட் பெற்றிருந்தோர் அனைவரும் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in