சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை: உயர்நீதிமன்றம் அதிரடி

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை: உயர்நீதிமன்றம் அதிரடி

நீதித்துறையை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

யூடியூபர் சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில், நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக கருத்தை பதிவேற்றம் செய்திருந்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி முன்பு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சவுக்கு சங்கர் பதில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாக தெரிவித்தது உண்மையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சவுக்கு சங்கர், நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். நீதித்துறையின் மதிப்பை குறைத்தோ, களங்கப்படுத்துவதோ எனக்கு நோக்கமல்ல. நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு" என்றார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை சிறிது நேரம் ஒத்திவைத்த நீதிபதிகள், பின்னர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்ற அவமதிப்புக்கு காரணமான பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொழில்நுட்பத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in