சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் சவுக்கு சங்கர்: காரணம் இதுதான்!

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் சவுக்கு சங்கர்: காரணம் இதுதான்!

சிறையில் தண்டனை பெற்றுவரும் சவுக்கு சங்கரைப் பார்க்கப் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதித்துறையில் ஊழல் படிந்து இருப்பதாக யூடியூபர் சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்த நீதிபதிகள், சர்ச்சைக்குரிய பதிவுகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொழில்நுட்பத்துறைக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மதுரை மத்திய சிறையிலிருந்து கடலூர் மத்திய சிறைக்கு சவுக்கு சங்கர் அன்றைய இரவே மாற்றப்பட்டார். அச்சுறுத்தல் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 16-ம் தேதி முதல் கடலூர் மத்திய சிறையிலிருந்து வரும் சவுக்கு சங்கரை,   பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தன்னை பார்க்க வரும் பார்வையாளர்கள் வருகைக்குத் தடை விதித்துள்ள  கடலூர் மத்திய சிறை நிர்வாகத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து, சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in