தேசிய நெடுஞ்சாலைகளை அமெரிக்காவுக்கு நிகராக மாற்றியே தீருவேன்... அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டம்!

செயற்கைக்கோள் மூலம் சுங்கக்கட்டணம் வசூல்
செயற்கைக்கோள் மூலம் சுங்கக்கட்டணம் வசூல்

டோல் பிளாசா முறைக்குப் பதிலாக, செயற்கைக்கோள் அடிப்படையில் சுங்கக் கட்டண வசூல் முறையை நடைமுறைப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூரில் இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது சுங்கக் கட்டண வசூல் நடைமுறை, இந்தியாவில் சாலை கட்டமைப்புகள், தேர்தல் பத்திர நன்கொடை விவகாரம் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.

அந்த பேட்டியில், “டோல் பிளாசா முறைக்குப் பதிலாக, செயற்கைக்கோள் அடிப்படையில் சுங்கக் கட்டண வசூல் முறையை நடைமுறைப்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண வசூலில், வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும். மக்கள் கடக்கும் தூரத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். இது மக்களின் பணத்தை மிச்சப்படுத்த உதவும்.

இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பு
இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பு

பாரத்மாலா பரியோஜனா திட்டம் சுமார் 26 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள பொருளாதார வழித்தடங்களை மேம்படுத்தும் வளர்ச்சியை திட்டமிடுகிறது. இது தங்க நாற்கர, வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு வழித்தடங்களுடன் சாலைகளில் பெரும்பாலான சரக்கு போக்குவரத்தை கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் நாட்டின் தலைவிதியையே மாற்றும். தேசிய நெடுஞ்சாலையின் சாலை கட்டமைப்பை அமெரிக்காவுக்கு இணையாக மாற்றுவதே எனது முயற்சி. இதில் நான் வெற்றி பெறுவேன் என உறுதியாக நம்புகிறேன்.

தேர்தல் பத்திரங்கள் முறையானது. அவை முழு வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கின்றன. பணம் வெளிப்படைத் தன்மையுடன் வர வேண்டும். அதை மனதில் வைத்துத்தான் தேர்தல் பத்திரம் உருவாக்கப்பட்டது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அனைத்துக் கட்சிகளின் கருத்துகளுடன் புதிதாக ஏதாவது முன்வைக்கப்படுமானால் உச்ச நீதிமன்றம் நிச்சயமாக இதுபற்றி சிந்திக்கும்." என்றார் நிதின் கட்கரி

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in