வேலராமமூர்த்தியின் 'குற்றப்பரம்பரை' கதையை இயக்குகிறார் சசிகுமார்: முக்கிய கதாபாத்திரத்தில் கேப்டன் மகன்!

சசிகுமார், வேலராமமூர்த்தி.
சசிகுமார், வேலராமமூர்த்தி.

வேலராமமூர்த்தியின் குற்றப்பரம்பரை கதையை வெப் சீரிஸாக இயக்குநர் சசிகுமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன் நடிக்க உள்ளார்.

நடிகரும், எழுத்தாளருமான வேலராமமூர்த்தி எழுதி வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது 'குற்றப்பரம்பரை' நாவல். இந்த கதையை இயக்குநர் சசிகுமார் வெப் சீரிஸாக இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சண்முகபாண்டியன்.
நடிகர் சண்முகபாண்டியன்.

இந்த வெப் சீரிஸில் விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 'சகாப்தம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான சண்முகபாண்டியன் 'மதுரைவீரன்' படத்திலும் நடித்திருந்தார். பெரிய அளவில் இப்படங்கள் பேசப்படவில்லை. இந்த நிலையில், வெப் சீரிஸில் அவர் நடிக்க உள்ளார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in