சசிகலாவின் உற்சாகமான கொண்டாட்டம் - இளவரசியுடன் பொங்கல் வைத்த வீடியோ வெளியீடு!

சசிகலாவின் உற்சாகமான கொண்டாட்டம் - இளவரசியுடன் பொங்கல் வைத்த வீடியோ வெளியீடு!

சசிகலா உற்சாகத்துடன் பொங்கல் வைத்து, படையலிட்டு, சூரியனுக்கும் சூடம் காட்டி, வழிபாடு செய்யும் வீடியோவினை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழர்களால் பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுபோல பல தலைவர்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் இளவரசியுடன் சேர்ந்து பொங்கல் வைத்து அதனை படையலிட்டு வழிபாடு நடத்துகிறார். அதன்பின்னர் அவர், சூடம் காட்டி சூரியனுக்கு வணக்கம் செலுத்துகிறார். பின்னர் அவரின் வீட்டில் உள்ள பூஜையறையில் உள்ள கடவுள் படங்களுக்கு வழிபாடு செய்கிறார்.

இந்த ட்வீட்டில் அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், “தைத்திருநாளில் விவசாயப் பெருங்குடி மக்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in