`சம்ஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி'- மாணவர்கள் மத்தியில் ஆளுநர் பேச்சு

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி`சம்ஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி'- மாணவர்கள் மத்தியில் ஆளுநர் பேச்சு
Updated on
1 min read

சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி என்றும் தமிழ் மொழி மீது இந்தியை திணிக்க முடியாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ் மொழி பேசும் பனாரஸ் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கலந்துரையாடினார். 'தமிழ்நாடு தர்ஷன்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் பேசுகையில், "தமிழ்மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது. இந்தி மொழியைவிட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சம்ஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி.

தமிழ் இல்லாமல் பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள நினைப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இதைத்தவிர்த்து, இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறு உண்டு. எனவே தமிழை ஆழமாகப் படித்து, தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in