தூய்மைப்பணியாளர் மேம்பாட்டுத் திட்டம்: மதுரையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தூய்மைப்பணியாளர் மேம்பாட்டுத் திட்டம்: மதுரையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

மதுரையில் தூய்மைப் பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அன்று இரவு மதுரை வந்தடைந்தார். இந்த நிலையில், தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை மதுரை மாந்கராட்சி கூட்டரங்கில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு, அவர்களது குழந்தைகளின் கல்வி, உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான இந்தத் திட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான லோகோவையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பின் தூய்மைப்பணியாளர்களுக்கான செயலியையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் மதுரை ஆரப்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது மற்றும் களப்பணி குழுவினரின் பணிகளை காணொலி காட்சி மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நகராட்சிகள் செயலர் சிவதாஸ்மீனா, நகராட்சி துறை நிர்வாக இயக்குனர் பொன்னையா, நிர்வாக இயக்குனர் (பேரூராட்சி) கிரண்குமார் குராலா, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in