மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்

சந்தியா தேவநாதன்
சந்தியா தேவநாதன்

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் சமூக வலைதளமான மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரோனா பேரழிவுக்குப் பிறகு மீண்டும் உலகம் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் கண்டு வருகிறது. ஆனாலும் பெருநிறுவனங்கள் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஸ்நான்சாட் நிறுவனம் ஏற்கெனவே 20 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது. ட்விட்டரைக் கைப்பற்றிய எலன்மஸ்க் 75 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளார்.

இந்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஸக்கர்பெர்க், மெட்டாவில் 11 ஆயிரம் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான தலைவரான அஜித் மோகன், தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். வேறு ஒரு நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்ததால் அவர் இந்த முடிவை எடுத்தார். அதனைத் தொடர்ந்து, வாட்ஸ் அப்பின் இந்தியத் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் இந்திய பிரிவின் மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கை இயக்குநராக இருந்த ராஜீவ் அகர்வால் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கான புதிய தலைவராக, சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், 2023 ஜனவரி 1-ம் தேதி பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தியா தேவநாதன்
சந்தியா தேவநாதன்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவியான சந்தியா தேவநாதன், ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் பி.டெக் முடித்ததோடு, டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பை பூர்த்தி செய்தார். சிட்டி வங்கியில் 9 ஆண்டுகள் பணிபுரிந்ததை தொடர்ந்து, ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியில் 6 ஆண்டுகள் முதன்மை அதிகாரிகள் ஒருவராக பணியாற்றியுள்ளார். பின்னர், 2016-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தில் இணைந்த சந்தியா வியாட்நாம், சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஆன்லைன் வணிகத்தில் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in