‘சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம்’ - யோகி ஆதித்யநாத் பரபரப்பு கருத்து

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமர் கோயிலைப் போன்ற மத வழிபாட்டு தலங்களை மீட்டெடுக்க பிரச்சாரம் செய்யவேண்டும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார். மேலும், சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என்று ஒவ்வொரு குடிமகனும் மதிக்க வேண்டும் எனவும் கூறினார்.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று ராஜஸ்தான் மாநிலம் பின்மாலில் அமைந்துள்ள நீலகண்ட மகாதேவ் கோயிலில் சிலைகள் மறுசீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அப்போது கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் யோகி, “ நமது வழிபாட்டுத் தலங்கள் எந்தக் காலகட்டத்திலும் இழிவுபடுத்தப்பட்டிருந்தால், 500 ஆண்டுகளுக்குப் பிறகு பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படும் அயோத்தியைப் போல அவற்றை மீட்டெடுப்பதற்கான பிரச்சாரம் தொடங்கப்பட வேண்டும். இது பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி. தேசிய உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த பிரம்மாண்டமான ராமர் கோவிலைக் கட்டுவதற்கு பக்தர்கள் அனைவரும் பங்களித்துள்ளீர்கள்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தங்கள் பாரம்பரியத்தை மதிக்கவும், அதைப் பாதுகாக்கவும் பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி எடுத்துள்ளார். 1400 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீலகண்டப் பெருமானின் ஆலயத்தைப் புனரமைத்திருப்பது, பாரம்பரியத்திற்கு மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கான எடுத்துக்காட்டு. ராஜஸ்தான் நிலம் மதம், கர்மா, பக்தி மற்றும் சக்தி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மையப் புள்ளியாகும். மதத்தின் உண்மையான ரகசியங்களை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால், ராஜஸ்தானுக்கு வர வேண்டியது அவசியம். சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என்று ஒவ்வொரு குடிமகனும் மதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியின் போது யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய நீர் மின்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் ருத்ராட்ச மரத்தை நட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in