‘உங்கள் வாயில் உள்ள ஸ்வீட்டை எனக்கு ஊட்டுங்கள்’: கூட்டத்தில் இருந்தவர்களை நெகிழ வைத்த எம்எல்ஏ!

‘உங்கள் வாயில் உள்ள ஸ்வீட்டை எனக்கு ஊட்டுங்கள்’:
கூட்டத்தில் இருந்தவர்களை நெகிழ வைத்த எம்எல்ஏ!

கர்நாடகாவில் பட்டியலின சாமியாரின் எச்சில் பட்ட இனிப்பை காங்கிரஸ் எம்எல்ஏ சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சாம்ராஜ்பேட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜமீர் அகமது கான் உள்ளார். இவரது தொகுதியில் ஈத்மிலான் பண்டிகையும், அம்பேத்கர் ஜெயந்தியும் இணைந்து நேற்று கொண்டாடப்பட்டது.

ஜமீர் அகமது கான் எம்எல்ஏ.
ஜமீர் அகமது கான் எம்எல்ஏ.

முஸ்லிம், பட்டியலின மக்களின் சகோதரத்துவத்தை பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. சட்டப்பேரவை உறுப்பினர் ஜமீர் அகமது கான் தலைமையில் நடந்த விழாவிற்கு பட்டியலினத்தைச் சேர்ந்த சாமியார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

விழா நிறைவு பெற்றதும், அங்குள்ள அனைவரும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். சட்டப்பேரவை உறுப்பினர் ஜமீர் அகமது கான் இனிப்பை பட்டியலின சாமியாருக்கு ஊட்டிவிட்டார். பதிலுக்கு அவரும் இனிப்பை எடுத்து எம்எல்ஏவுக்கு ஊட்டிவிட முயன்றார். அப்போது சாமியாரைத் தடுத்த எம்எல்ஏ ஜமீர், அவரது வாயில் ஏற்கெனவே இருந்த இனிப்பை எடுத்து தனக்கு ஊட்டி விடுமாறு கேட்டுக் கொண்டார். உடனே சாமியாரும் தனது வாயில் இருந்த இனிப்பை எடுத்து எம்எல்ஏவுக்கு ஊட்டி விட்டார். அதை வாங்கி சாப்பிட்ட சட்டப்பேரவை உறுப்பினர் ஜமீர் அகமது கான், "பார்த்தீர்களா, இதுதான் சகோதரத்துவம்" என மைக்கில் பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in