‘நெற்றியில் ஏன் பொட்டு இல்லை? உனக்குப் பதில் சொல்ல மாட்டேன்!’

பெண் செய்தியாளரைக் கடிந்துகொண்ட வலதுசாரித் தலைவர்
மகாராஷ்டிரத் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுடன் சம்பாஜி பிடே (வலது)
மகாராஷ்டிரத் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுடன் சம்பாஜி பிடே (வலது)

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த வலதுசாரித் தலைவரான சம்பாஜி பிடே, தன்னிடம் பேட்டி எடுத்த பெண் செய்தியாளர் தன் நெற்றியில் பொட்டு வைத்திருக்கவில்லை என்பதால் அவரிடம் பேச மறுத்தது சர்ச்சையாகியிருக்கிறது.

முழுநேர ஆர்எஸ்எஸ் ஊழியராக இருந்த சம்பாஜி பிடே பின்னர், ஷிவ் பிரதிஸ்தான் இந்துஸ்தான் எனும் அமைப்பைத் தொடங்கி இயங்கிவருகிறார். பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு நெருக்கமானவர் எனக் கருதப்படுகிறார்.

இந்நிலையில், மகாராஷ்டிரத் தலைமைச் செயலகமான ‘மந்த்ராலயா’வில் நேற்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை அவர் சந்தித்தார். அதுதொடர்பாக, செய்தி சேனல் ஒன்றின் பெண் செய்தியாளர் ஒருவர் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றார்.

ஆனால், அந்தச் செய்தியாளர் தன் நெற்றியில் பொட்டு அணிந்திருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய சம்பாஜி பிடே அவருக்குப் பதில் சொல்ல முடியாது என்று மறுத்துவிட்டார்.

கூடவே, ஒரு பெண் பாரத அன்னையைப் போன்றவர் என்றும், பொட்டு அணியாமல் ஒரு விதவையாகக் காட்சியளிக்கக்கூடாது என்றும் அறிவுரை கூறினார்.

அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மகாராஷ்டிர மகளிர் ஆணையத்தின் தலைவர் ரூபாலி சாகண்கர் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

சம்பாஜி பிடே 2018-ல், தனது தோட்டத்து மாங்காய்களை உண்ட தம்பதியினருக்கு ஆண் குழந்தைகள் பிறந்ததாகக் கூறி சர்ச்சைக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in