கனவு கார் ‘லம்போர்கினி’யின் இந்திய விற்பனை உயர்ந்தது!

கனவு கார் ‘லம்போர்கினி’யின் இந்திய விற்பனை உயர்ந்தது!

கார்களை நேசிக்கும் கனவான்களின் கனவு வாகனமான லம்போர்கினியின் இந்திய விற்பனை, கடந்த வருடத்தை காட்டிலும் 33% உயர்வு கண்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி, அதே பெயரின் கீழ் ஏராளமான சொகுசுக் கார்களை தயாரித்து உலகமெங்கும் விற்பனை செய்து வருகிறது. சொகுசு என்பதற்கு முழுமையான பொருள் சேர்க்கும் இந்த கார், வேகத்திலும் சூரப்புலி!

சர்வதேச பணக்காரர்களின் கனவுகளில் லம்போர்கினி காரை வாங்குவதும் ஒன்றாக இருக்கும். இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் கால்பதித்த லம்போர்கினியின் விற்பனை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டில் 92 கார்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில் விற்பனையைக் காட்டிலும் இது 33% உயர்வு ஆகும். ஆனபோதிலும் லம்போர்கினியின் இந்திய விற்பனை அதன் உலகளாவிய விற்பனையில் 1% மட்டுமே. 2022ம் ஆண்டில் உலகளவில் 9,233 லம்போர்கினி கார்கள் விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சாலைகள், லம்போர்கினி போன்ற சொகுசுக் கார்களுக்கு ஏற்றவை இல்லை என்றபோதும், இறக்குமதி கார்களுக்கு 100% வரி விதிக்கப்படுவதாலும், இந்தியக் கோடீஸ்வரர்கள் மத்தியில் இந்த கார் மீதான காதல் குறைந்தபாடில்லை.

லம்போர்கினி கார்கள் இந்திய மதிப்பில், ரூ.4 கோடி முதல் ரூ.8 கோடி வரையிலான விலைகளில் கிடைக்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in