அசுர வேகத்தில் பஸ் ஸ்டாண்ட் கடைக்குள் புகுந்த கார்: உடல் நசுங்கி மூதாட்டி பலி

கடைக்குள் புகுந்த கார் மீட்கப்படுகிறது.
கடைக்குள் புகுந்த கார் மீட்கப்படுகிறது. அசுர வேகத்தில் பஸ் ஸ்டாண்ட் கடைக்குள் புகுந்த கார்: மூதாட்டி உடல் நசுங்கி பலி

கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் கடைக்குள் புகுந்த கார் மூதாட்டி உயிரைப் பறித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த கார் ஒன்று, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதிக்கு இன்று மாலை வந்தது. காரில் இருந்து டிரைவர் கீழே இறங்கி கடைக்குச் சென்று விட்டார். அப்போது காருக்குள் மதுபோதையில் இருந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் காரை திடீரென இயக்கியுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், நாராயணன் என்பவரது டீ கடைக்குள் புகுந்தது. அசுர வேகத்தில் சென்ற கார் மோதியதில் அங்கு நின்ற தெற்கு வேளானூரைச் சேர்ந்த வேலு மனைவி வெள்ளி (82) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நாராயணன் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

கடைக்குள் புகுந்த கார், ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது. மூதாட்டி உடலை மீட்ட கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சேலத்துக் கும்பலை தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in