சங்கரன்கோவிலில் களைகட்டும் கழுதைப்பால் விற்பனை: குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பொதுமக்கள்

அஞ்சுகம்
அஞ்சுகம்சங்கரன்கோவிலில் களைகட்டும் கழுதைப்பால் விற்பனை: குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பொதுமக்கள்

சங்கரன்கோவிலில் கழுத்தைப்பால் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் பாலை வாங்கிச் செல்கின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சுதம். இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். சலவைத் தொழிலில் பொதிசுமக்கும் பணியில் ஈடுபடுத்துவதற்காக கழுதைகளை வளர்த்து வந்துள்ளார். காலம் காலமாக இவருடைய முன்னோர்கள் கழுதைப் பால் விற்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது இவரும் கழுதைப்பால் விற்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். கழுதைப்பாலின் நன்மை அறிந்து தினந்தோறும் இவரை நாடி அதிகமானோர் கழுதைப்பால் கேட்டு வரத் தொடங்கினர்.

அஞ்சுகம்
அஞ்சுகம்

கழுதைப்பால் குறித்து அஞ்சுகம் கூறுகையில், "கழுதைப்பால் குழந்தைகளுக்கு கொடுப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மஞ்சள் காமாலை நோய் தாக்காது. சளித்தொல்லை அகலும். சீர் தட்டும் குழந்தைகளுக்கு உடனடி மருந்தாக செயல்படுகிறது. உடல் இளைத்த குழந்தைக்கு உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. கழுதைப்பால் எங்கு கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்து வந்ததால் தானே மக்களைத் தேடி சென்று கையில் இருக்கும் ஒலிபெருக்கியில் அறிவித்தபடி கழுதைப்பால் விற்கும் பணியை தொடங்கினேன்.

குழந்தைகளுக்கு அருமருந்தாக கழுதைப்பால் உள்ளது. ஒரு சங்கு கழுதை பால் 60 ரூபாய்க்கு விற்கிறேன். இதன் நன்மை தெரிந்த பெரும்பாலான பெண்கள் தனது வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். தற்போது கழுதை இனங்கள் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. வருங்காலங்களில் அரிதிலும் அரிதாக கழுதைப்பால் மாறிவிடுவதற்கான வாய்ப்புள்ளது. கழுதை இனத்தை பாதுகாக்க நடவடிக்கையை அரசு கால்நடைத்துறை மூலமாக மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in