சோகம்: சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் காலமானார்!

சுப்ரதா ராய்
சுப்ரதா ராய்

சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் உடல்நலக் குறைபாடு காரணமாக நீண்ட காலமாக உள்ளூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 75.

இதுதொடர்பாக சஹாரா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மெட்டாஸ்டேடிக் வீரியம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றால் எழும் சிக்கல்களை எதிர்கொண்டு வந்த சுப்ரதாய்,  கார்டியோஸ்பிரேட்டரி அரெஸ்ட் (மூச்சுத்திணறல், இதய செயல்பாடு, அதனால் சுயநினைவு ஆகியவற்றை திடீரென இழப்பது) காரணமாக நேற்று இரவு 10.30 மணியளவில் காலமானார்.

கடந்த ஞாயிறு அன்று உடல்நலக் குறைவு காரணமாக கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் (KDAH) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இழப்பை ஒட்டுமொத்த சஹாரா இந்தியா குழுமமும் ஆழமாக உணரும்.

சஹாராஸ்ரீ ஒரு வழிகாட்டும் சக்தியாகவும், வழிகாட்டியாகவும், அவருடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் பெற்ற அனைவருக்கும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in