சபரிமலை ஐயப்பனின் திருவாபரணம் தரிசனம்: பந்தளம் அரச குடும்பம் அறிவிப்பு

சபரிமலை ஐயப்பனின் திருவாபரணம் தரிசனம்: பந்தளம் அரச குடும்பம் அறிவிப்பு

சபரிமலை ஐயப்பனின் திருவாபரணங்களை வரும் 17-ம் தேதி முதல் தரிசிக்கலாம் என பந்தளம் அரச குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பனுக்கு வருடத்தில் வெகு சிலநாள்கள் மட்டுமே நகைகள் அணிவிக்கப்படும். அதற்கான திருவாபரணங்கள் வருடத்தின் மற்றநாள்களில் பந்தளம் அரச குடும்பத்திடம் இருக்கும். இந்த திருவாபரணங்கள் அனைத்தும் நைஸ்டிக பிரம்மச்சாரி கோலத்தில் அருள்பாலிக்கும் சபரிமலை ஐயப்பனுக்காக பந்தளம் அரச குடும்பத்தினர் செய்தவையாகும். பந்தளம் அரண்மையில் இருந்து மூன்றுநாள்கள் காட்டுப்பகுதியில் நடைபயணமாகச் சென்றே இந்த திருவாபரணங்கள் சன்னிதானத்தை அடையும். சபரிமலை ஐயப்பனை திருவாபரணங்கள் சகிதம் பார்ப்பது மிகவும் விசேசமாகும்.

பந்தளம் மன்னர்களின் குடும்பத்தின் சார்பில் திருவாபரணப் பெட்டி, வெள்ளிப் பெட்டி, கொடி பெட்டி என மூன்று பெட்டிகள் பராமரிக்கப்படுகிறது. இதில் திருவாபரணப் பெட்டியில் சபரிமலை சாஸ்தா மீசையுடன் ராஜ கோலத்தில் இருக்கும் திருமுகம், திருவாச்சி, பெரிய கத்தி, சிறிய கத்தி, யானை, புலி விக்கிரகங்கள், வெள்ளி கட்டிய வலம்புரி சங்கு உள்ளிட்ட பொருள்கள் உள்ளன. பந்தளம் அரண்மனையில் இப்போது இந்த திருவாபரணங்கள் உள்ளன.

கார்த்திகை 1 முதல் சபரிமலைக்கு விரதம் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இதைப் பார்ப்பதற்கு வசதியாக இந்த திருவாபரணங்கள் வரும் 17-ம் தேதி முதல் தினசரி காலை 5.30 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும் என பந்தளம் அரச குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த திருவாபரணங்களையும் பார்க்கும் சூழல் இதனால் ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in