கள்ளக்காதலி மகளுக்குப் பாலியல் டார்ச்சர்: கேரள தொழிலாளியை சிக்க வைத்த பெண்

கள்ளக்காதலி மகளுக்குப் பாலியல் டார்ச்சர்: கேரள தொழிலாளியை சிக்க வைத்த பெண்

15 வயது சிறுமிக்கும், அவரது தம்பிக்கும் பாலியல் தொல்லை தந்த கூலித் தொழிலாளி, அவருக்கு உடந்தையாக இருந்த பாட்டி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் உண்ணி என்கிற டிஜேஷ் (38). கூலித்தொழிலாளியான இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே 15 வயதில் ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதையடுத்து டிஜேஷ் மலப்புரத்தில் இருந்து இடம் பெயர்ந்து அருமனை பகுதிக்கு வந்து அந்த பெண்ணுடன் வசித்து வந்தார். அவர்களுடன் பெண்ணின் தாயாரும் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண் தனது குழந்தைகளை விட்டுவிட்டு வாலிபருடன் சென்று விட்டார். இதனால் அந்த பெண்ணின் குழந்தைகளை டிஜேசும், அந்த பெண்ணின் தாயாரும் கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் டிஜேஷ் அந்த பெண்ணின் 15 வயது சிறுமிக்கும், அவரது தம்பிக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சிறுமி தனது பாட்டியிடம் கூறி அழுதார். ஆனால், அவரோ வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று டிஜேசுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

இதற்கிடையே, சம்பவத்தன்று டிஜேஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண் பார்த்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிஜேஷ் அந்த பெண்ணிடம் தகராறு செய்தார். இதையடுத்து சிறுமி பக்கத்து வீட்டு பெண்ணின் உதவியுடன் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் டிஜேஷ் மீதும், சிறுமியின் பாட்டி மீதும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in