வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு இன்றுமுதல் ஆர்டிபிசிஆர் சோதனை: மத்திய சுகாதார அமைச்சர்

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு இன்றுமுதல் ஆர்டிபிசிஆர் சோதனை: மத்திய சுகாதார அமைச்சர்

வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தானாக முன்வந்து விளக்கமளித்தார். அதில், “ கடந்த சில நாட்களாக உலகின் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டதால் கரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தினோம். இப்போது உலகம் முழுவதும் கரோனா அதிகமாக பரவுவதால், இந்த நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து இதுவரை 220 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தியுள்ளோம். பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை அதிகப்படுத்த மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளனர். கரோனா நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டியது கட்டாயம். கரோனா விவகாரத்தில் மத்திய அரசு துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. கரோனா கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை தீவிரப்படுத்தவும், மரபணு பரிசோதனை செய்யவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in