44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு

44 இடங்களில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு

44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாங்குனேரி ஆகியவற்றைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.இதற்கு அனுமதி வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் போலீஸார் இந்தப் பேரணிக்கு தடை விதிப்பதாக அறிவித்தனர்.

ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 6-ம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த அனுமதி அளித்ததுடன், அதற்கான நிபந்தனைகளையும் விதித்து, அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் போலீஸார் வெறும் 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கினர்.இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை,நாங்குநேரி ஆகியவற்றைத் தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டுத் திடல்களை தேர்ந்தெடுக்கலாம். 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும். இந்த 6 இடங்களில் 2 மாதங்களுக்குப் பிறகு புதிய மனு கொடுக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in