ஆர்எஸ்எஸ் மாநாடு இன்று தொடக்கம்: முக்கிய சமூக அரசியல் முடிவுகளை விவாதிக்கிறது!

ஆர்எஸ்எஸ் அமைப்பினர்
ஆர்எஸ்எஸ் அமைப்பினர்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு ஹரியானாவில் இன்று தொடங்கி நடைபெறுகிறது. சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் நெருக்கத்தில் பல்வேறு அரசியல் முடிவுகளும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

ஹரியானா மாநிலத்தின் பானிபட் மாவட்டத்தில் நடைபெறும் இந்த வருடாந்திர கூட்டத்தில் நாடெங்கிலும் இருந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த சுமார் 1500 நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோர் 3 நாள் நிகழ்வுகளிலும் பங்கேற்கின்றனர். பாஜக தரப்பில் அதன் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் நிறைவு நாள் விழாவில் பங்கேற்கின்றனர்.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டினை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழாக பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்தும், 2024 மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனவும் தெரிய வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in