65 ரூபாய் செலுத்திய பசுமை வீட்டிற்கு 91 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம்: பெண்ணுக்கு ஷாக் கொடுத்த மின்வாரியம்

65 ரூபாய் செலுத்திய பசுமை வீட்டிற்கு 91 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம்: பெண்ணுக்கு ஷாக் கொடுத்த மின்வாரியம்

நெல்லையில் பசுமை வீட்டில் தந்தையுடன் வசிக்கும் பெண்ணுக்கு 91 ஆயிரத்து 130 ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியத்தில் இருந்து வந்த குறுஞ்செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது பாத்து(40). இவர் தந்தை உதுமான் கனியுடன் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மின்வாரியத்தில் இருந்து முகமது பாத்துக்கு ஒரு குறுஞ்செய்தி நேற்று வந்தது. அதில் அதில் வீட்டிற்கான மின்கட்டணம் 91 ஆயிரத்து 130 ரூபாயை நவ. 5-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் முகமது பாத்து அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து நாங்குநேரியில் உள்ள மின்வாரியத்திற்குச சென்ற முகமது பாத்து, மாதம் 65 ரூபாய் தான் மின் கட்டணம் செலுத்தி வருகிறேன். பிறகு எப்படி எங்கள் வீட்டிற்கு 91 ஆயிரம் மின் கட்டணம் வந்தது என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறாகத் தொகை குறுஞ்செய்தியில் வந்திருக்கலாம். சில நாட்களில் சரியான கட்டணத்துடன் ரசீது வந்துவிடும் எனக் கூறி அவரைச் சமாதானப்படுத்தி அதிகாரிகள் அனுப்பியுள்னர். 65 ரூபாய்க்கு மின் கட்டணம் செலுத்திய வீட்டிற்கு, 91 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மின்வாரியம் அனுப்பியகுறுஞ்செய்தி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in