‘ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான, 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின’

ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரூ2000 நோட்டுகள்
ரூ2000 நோட்டுகள்

ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளன என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2,000 ரூபாய் கரன்சிகளை திரும்பப்பெறுவதாக அண்மையில் அரசு அறிவித்தது. மதிப்பிழப்பு செய்யப்படுவதில்லை என்றபோதும், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப்பெறுவதாக அதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியது. அதன்படி செப்டம்பர் இறுதிக்குள் பொதுமக்கள் தங்கள் வசமுள்ள, 2000 ரூபாய் கரன்சிகளை தங்கள் வங்கி இருப்பில் செலுத்தலாம்; அல்லது இதர மதிப்பிலான ரூபாய் தாள்களாக அவற்றை மாற்றிக்கொள்ளலாம்.

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதில் நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அதன்படி நாளொன்றுக்கு ரூ.20,000 மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை மட்டுமே ஒரு நபர் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மே.23 அன்று தொடங்கிய இந்த நடைமுறையின் மூலம் வங்கிகள் மட்டுமன்றி, ரிசர்வ் வங்கியின் 19 மண்டல அலுவலகங்களையும் பொதுமக்கள் அணுகி இந்த வசதியை பெறலாம்.

இந்த வகையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பியிருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2016ல் அறிமுகமான ரூ.2000 நோட்டுகளின் அச்சடிப்பு அடுத்த 2 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் மத்தியிலான அதன் புழக்கமும் வெகுவாய் குறைக்கப்பட்டது. எஞ்சியிருந்த ரூபாய் நோட்டுகளே தற்போது வங்கிக்கு திரும்ப அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in