12 ஆயிரம் ரூபாய் சீனா செல்போன்களுக்கு வருகிறது தடை: மத்திய அரசு பரிசீலனை

12 ஆயிரம் ரூபாய் சீனா செல்போன்களுக்கு வருகிறது தடை: மத்திய அரசு பரிசீலனை

சீனாவின் தயாரிப்புகளில் உருவான செல்போன்கள் மீது மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதில், ரூ.12,000 விலைக்கும் குறைவானவற்றுக்குத் தடை விதிக்கும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

இந்தியாவின் சந்தைகளில் சீனா நாட்டு நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான செல்போன்களுக்கு பெரும் முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. இவை குறைவான விலைகளில் அதிநவீன வசதிகளுடன் இருப்பது அதன் காரணம். இதனால், சீனாவின் செல்போன்களை இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. இந்த தகவல் சர்வதேச பொருளாதார ஊடகங்களின் மூலம் தெரிந்துள்ளது. இதைத் தடுப்பதுடன் இந்திய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்க மத்திய அரசு விரும்புகிறது.

எனவே, சீனாவின் தயாரிப்புகளில் ரூ.12,000 விலைக்கும் குறைவானவற்றை இந்தியாவில் தடை செய்ய ஆலோசனை செய்யப்படுகிறது. இந்த தடையினால் சீனாவின் பல முக்கிய நிறுவனங்கள் பாதிப்பு உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், கரோனா பரவலால் சர்வதேச அளவில் வீழ்ச்சி அடைந்த சந்தையில் செல்போன்களை சீனா மீண்டும் நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.

ஏற்கெனவே, சீனாவின் சுமார் 20 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், அவை பயன்படுத்தப்படும் செல்போன்களுக்கு சிறிது பாதிப்புகள் ஏற்பட்டன. இனி, இந்த குறைந்த விலை செல்போன்களுக்கும் விதிக்கப்படும் தடையினால் சீனாவின் நிறுவனங்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. சீனாவில் செல்போன்கள் தயாரிப்பு நிறுவனங்களாகளில் சில இந்தியாவில் வரி ஏய்ப்பில் சிக்கியுள்ளன. இதன் மீதான விசாரணையை மத்திய அரசின் பொருளாதாரப் பிரிவுகள் துவக்கி இருப்பது நினைவுகூரத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in