சுற்றிவளைத்த போலீஸ்; தப்பியோடிய பிரபல ரவுடிக்கு கை, கால் உடைந்தது: 40 நாட்டு வெடிகுண்டு, அரிவாள் பறிமுதல்

சுற்றிவளைத்த போலீஸ்; தப்பியோடிய பிரபல ரவுடிக்கு கை, கால் உடைந்தது: 40 நாட்டு வெடிகுண்டு, அரிவாள் பறிமுதல்

பிரபல ரவுடி வெள்ளை பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 40 நாட்டு வெடிகுண்டு, 40 அரிவாள் மற்றும் கைத்துப்பாக்கி, தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தப்பி ஓடமுயன்ற போது வழுக்கி விழுந்து இரு ரவுடிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

சென்னை எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த பிரபல ஏ+ கேட்டகரி ரவுடி வெள்ளை பிரகாஷ்(31). ஸ்கெட்ச் போட்டு கொடுப்பதில் கைதேர்ந்த வெள்ளை பிரகாஷ் மீது மூன்று கொலை வழக்கு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பல குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி வெள்ளை பிரகாஷ் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் பூந்தமல்லி அருகே பதுங்கி இருந்த ரவுடி வெள்ளை பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளியான செங்குன்றத்தை சேர்ந்த ரவுடி அப்பு என்கிற விக்கிரமாதித்தன் ஆகிய இருவரை அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து ரவுடி வெள்ளை பிரகாஷ் வீட்டில் சோதனை செய்து 40 நாட்டு வெடிகுண்டுகள், 40 அரிவாள், கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீஸாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது வழுக்கி விழுந்து ரவுடி வெள்ளை பிரகாஷுக்கு கை, காலில் எலும்பு முறிவும், அவரது கூட்டாளி விக்ரமாதித்தனுக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் இவருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in