தலையில் கல்லைப்போட்டு ரவுடி கொலை: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

கொலை செய்யப்பட்ட ரவுடி சண்முகம்
கொலை செய்யப்பட்ட ரவுடி சண்முகம்தலையில் கல்லைப்போட்டு ரவுடி கொலை: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

சென்னையில் தலையில் கல்லைப் போட்டு ரவுடி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக இண்டு சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரைச் சேர்ந்த ரவுடி சண்முகம்(25). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரவுடி சண்மூகம் மீது வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலை ரவுடி சண்மூகம் தனது நண்பர்களுடன் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் உள்ள அட்டிங் கிரவுண்ட்டில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மதுபோதையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், சண்முகத்திடம் தகராறில் ஈடுபட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ரவுடி சண்முகம் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. உடனே சக நண்பர்கள் தகவல் அளித்ததன் பேரில் அங்கு சென்ற வண்ணாரப்பேட்டை போலீஸார், ரவுடி சண்முகம் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தினர். இதையடுத்து இக்கொலை வழக்கில் தொடர்புடைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி ஆளா என்ற சக்திவேல்(23) மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற அஜித்(19), வசந்தகுமார் என்ற நல்லகுமார்(20) மற்றும் ஒரு சிறுவர் உட்பட 3 பேரை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in