தலைக்கேறிய போதை... இரவில் இன்பாம் கொடுத்த கூட்டாளி: ரவுடியை கொடூரமாக சென்ற கும்பல்

தலைக்கேறிய போதை... இரவில் இன்பாம் கொடுத்த கூட்டாளி: ரவுடியை கொடூரமாக சென்ற கும்பல்

சோழவரம் அருகே ரவுடியை படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ரவுடிகள் இரண்டு பேர் காவல்துறையினர் நடத்திய வாகன தணிக்கையில் சிக்கினர்.

சென்னையை அடுத்த சோழவரம் சிவந்தி ஆதித்தனார் நகர், பாரதியார் தெருவை சேர்ந்த ரவுடி மதி என்ற மதிவாணன்(26). இவர் மீது மீஞ்சூர், சோழாவரம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு மதிவாணன், தனது கூட்டாளிகளான செங்குன்றம் பகுதியை சேர்ந்த ஹேம்நாத்(18), சரத்குமார்(19), தனுஷ்(18) ஆகியோருடன் சோழவரம் காந்தி நகரில் மது அருந்தி உள்ளார். அப்போது அனைவரும் மது போதையில் இருந்தபோது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மதிவாணனை கத்தியால் சரமாரி வெட்டியது. அப்போது மதிவாணனுடன் இருந்த அவரது நண்பர்கள் ஹேம்நாத், தனுஷ், சரத் ஆகியோர் தடுக்க முயன்ற போது அந்த கும்பல் அவர்களையும் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றது.

இதில் படுகாயமடைந்த ரவுடி மதிவாணன் ரத்தவெள்ளத்தில் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் சோழவரம் போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மதிவாணன் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு பாடியநல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு முதாப்புதுப்பேட்டை போலீஸார் பாலவேடு சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது ஆட்டோவில் வந்த 2 வரும் தப்பி சென்ற நிலையில் இருவரை போலீஸார் பிடித்து சோதனை செய்த போது ரத்தக்கறையுடன் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் ஆயுதங்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சோழவரத்தில் ரவுடி மதிவாணனை படுகொலை செய்து விட்டு தப்பி செல்லும் போது போலீஸில் சிக்கியது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் ரவுடி ராம்கி, சொட்டைசூர்யா ஆகிய இருவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல ரவுடி கஞ்சா மணியை ரவுடி மதிவாணன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர். இதற்கு பழிவாங்கும் விதமாக கஞ்சா மணியின் தம்பி பிரபா தனது கூட்டாளிகள் ராம்கி, சொட்டைசூர்யா ஆகியோருடன் சேர்ந்து மதிவாணனை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது.

அதன்படி நேற்று மாலை ராம்கி, ரவுடி மதிவாணனுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு பின்னர் அவருக்கு பிரைடு ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். மதிவாணன் மற்றும் அவரது நண்பர்களுக்கு போதை ஏறியதும் ராம்கி, பிரபாவுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு கூட்டாளிகளுடன் ஆட்டோவில் வந்த பிரபா, மதிவாணனை கொலை செய்துவிட்டு ஆட்டோவில் தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முத்தாப்புதுப்பேட்டை போலீஸார் சோழவரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கொலையாளிகள் ராம்கி, தனுஷ், ஆகியோரை சோழவரம் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். தப்பி ஓடிய முக்கிய ரவுடி பிரபா மற்றும் அவரது கூட்டாளிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in