கடலூர் சிறையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் தற்கொலை முயற்சி

ரவுடி எண்ணூர் தனசேகரன்
ரவுடி எண்ணூர் தனசேகரன் கடலூர் சிறையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் தற்கொலை முயற்சி

கடலூர் மத்திய சிறையில் கைதியாக  அடைக்கப்பட்டுள்ள  பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் கேப்பர் மலையில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களில் ஒருவராக சென்னை எண்ணூரைச்  சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மற்றும் கைதிகள் அறையில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது தனசேகரன் அறையிலிருந்து செல்போன் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தனசேகரன்  கூலிப்படையின் மூலம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி  மணிகண்டனின் வீட்டு சமையல் அறையில்  பெட்ரோலை ஊற்றி வீட்டுக்கு  தீ வைத்தார்.

அது உடனடியாக கண்டறியப்பட்டு தீயணைக்கப்பட்டதால்  மணிகண்டன் குடும்பத்தினர் யாருக்கும் உயிர் சேதம் இன்றி தப்பினர்.  கடலூர் மத்திய சிறை துணைக் கண்காணிப்பாளரின் வீட்டை தீவைத்து குடும்பத்துடன் கொலை செய்ய கூலிப்படை மூலம் முயற்சி செய்த வழக்கில் எண்ணூர் தனசேகரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணூர் தனசேகரன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணூர் தனசேகரன் கடலூர் சிறையில் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் தற்கொலை முயற்சி

இந்நிலையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் நேற்று ஆஜர் படுத்த எண்ணூர் தனசேகரன் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு வரப்பட்டார். இன்று அதிகாலையில் அளவுக்கு அதிகமான பி.பி மாத்திரைகளை சாப்பிட்டு அவர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் மயங்கி கிடந்த அவரை போலீஸார்  மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால்  கடலூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிறையில் பிரபல ரவுடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in