தலைக்கவசத்துடன் சுற்றி வளைத்த கும்பல்: மனைவி கண்முன்னே ரவுடி கொல்லப்பட்ட பயங்கரம்

தலைக்கவசத்துடன் சுற்றி வளைத்த கும்பல்: மனைவி கண்முன்னே ரவுடி கொல்லப்பட்ட பயங்கரம்

திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒலே சரவணன்(35). இவர் தனது மனைவியுடன் திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே உள்ள காவல் குடியிருப்பு பகுதியில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்த போது தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவரை கத்தியால் தாக்கியுள்ளனர். தப்பிப்பதற்காக ஓடிய சரவணனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இது குறித்து உடனடியாக திருவான்மியூர் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருவான்மியூர் போலீஸார் சரவணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி கொலையாளிகளை போலீஸார் அடையாளம் கண்டிருக்கிறார்கள். சரவணன் சமீபத்தில் தான் வழக்கு ஒன்றில் சிறை சென்று வெளியில் வந்துள்ளார். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனைவி கண்முன்பே ரவுடி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in