இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கரோனா தொற்று: ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கரோனா தொற்று: ரசிகர்கள் அதிர்ச்சி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட ரேபிட் ஆன்டிஜென் சோதனையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ரோகித் சர்மா தற்போது அணி ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், அவர் பிசிசிஐ மருத்துவக் குழுவின் பராமரிப்பில் உள்ளார்" என்று கூறியது.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்திய அணி நாடு திரும்பியது. தற்போது இந்த 5 வது டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் நடைபெறவுள்ளது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா அணி லீசெஸ்டர்ஷயர் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது, இந்த போட்டியின் 3 வது நாளான நேற்று ரோகித் சர்மாவுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

கேப்டன் ரோகித் சர்மாவு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்க முடியுமா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவரால் ஆட முடியாத நிலை ஏற்பட்டால் யார் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in