மருத்துவக்கல்லூரி மாணவியை ராகிங்: மூன்று பேர் அதிரடியாக சஸ்பெண்ட்

மருத்துவக்கல்லூரி மாணவியை ராகிங்: மூன்று பேர் அதிரடியாக சஸ்பெண்ட்

கேரளாவில் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியை ராகிங் செய்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் மருத்துவக்கல்லூரி உள்ளது. இங்கு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை சில மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த மாணவி, கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்தார். இதையடுத்து அந்த மாணவியை ராகிங் செய்தததாக மருத்துவக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் இருவர் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் என மூன்று பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து கல்லூரியின் துணை முதல்வர் கே.ஜி.சஜித்குமார் கூறுகையில்," மாணவி புகாரின் பேரில், உள்ளகக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது" என்றார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் இடைநிறுத்தப்பட்ட காலத்தில் வகுப்புகளுக்குச் செல்லவோ, தேர்வு எழுதவோ அல்லது விடுதிக்குள் நுழையவோ முடியாது என்று கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in