ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து இன்ஜினியரிடம் பணம் பறித்த வழக்கு: பக்தர் வேடத்தில் தப்பிய இருவர் கைது

பக்தர் வேடத்தில் தப்பிய இருவர் கைது
பக்தர் வேடத்தில் தப்பிய இருவர் கைதுஓரினச் சேர்க்கைக்கு அழைத்து இன்ஜினியரிடம் பணம் பறித்த வழக்கு: பக்தர் வேடத்தில் தப்பிய இருவர் கைது

சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இன்ஜினியரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த வழக்கில் பக்தர் வேடத்தில் பழநிக்கு கிளம்பிய இருவரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 25 வயதான பி.இ., பட்டதாரி. இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகை விடுமுறையில் ஊருக்கு வந்தார். இணையதள பயன்பாடு மூலம் பழகிய நண்பர் ஒருவர் இவரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார்.

இதன்படி, ஜன.20-ம் தேதி ராமேஸ்வரம் அருகே வேதாளை சென்றார். அங்கு அவரை ஓரினச்சேர்க்கை்கு அழைத்த நண்பர், இருசக்கர வாகனத்தில் ஏற்றி ஆள்நடமாட்டமில்லாத கடற்கரை பகுதிக்கு ஏற்றிச்சென்றார். அங்கு ஏற்கெனவே, காத்திருந்த 5 பேருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்ற நண்பரும், இன்ஜினியரைத் தாக்கினர்.

அத்துடன் அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயின், வெள்ளி மோதிரம், ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.37 ஆயிரத்தைப் பறித்தனர்.

இதன்பின்னர், இன்ஜினியரை நிர்வாணப்படுத்தி செல்போனில் வீடியோ எடுத்தனர். இங்கு நடந்தவற்றை வெளியே சொன்னால் கொலைசெய்து விடுவோம் என்றும், நிர்வாண வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் எனவும் மிரட்டி இன்ஜினியரை வீட்டுக்கு அனுப்பினர்.

இதுகுறித்து இன்ஜினியர் அளித்த புகாரின் அடிப்படையில், மண்டபம் போலீஸார், அடையாளம் தெரியாத 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பணம் எடுத்தபோது ஏடிஎம் மைய சிசிடிவியில் பதிவான காட்சியின்படி துரித விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், உச்சிப்புளி அருகே நாகாச்சி பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் என்பது தெரிய வந்தது.

இதையறிந்த அக்கும்பல் தப்பிக்க திட்டம் தீட்டினர். இதில் இருவர் பக்தர் வேடத்தில் பழநிக்கு காரில் செல்ல உள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்த போலீஸார், காரில் சென்ற நாகாச்சி மாரீஸ்வரன் (23), மணிகண்டன் (24) ஆகியோரை ராமநாதபுரம் இசிஆர் சந்திப்பு சாலையில் வாகனச்சோதனையின் போது கைது செய்தனர்.

இருவரிடமும் நடத்திய விசாரணையில், இவர்கள் உள்பட 6 பேர் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள் தவிர எஞ்சிய 4 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in