பழனி: ரோப்கார் சேவை திடீர் நிறுத்தம்... பக்தர்கள் அவதி!

பழனி தண்டாயுதபாணி கோயில்
பழனி தண்டாயுதபாணி கோயில்

காற்றின் வேகம் அதிகரித்ததால் பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் ரோப்காரில் பழுது ஏற்பட்டுள்ளதாக, ரோப்கார் சேவையை ஊழியர்கள் திடீரென நிறுத்தினர். ஆடி மாதத்தை முன்னிட்டு, பலரும் ஆன்மிக சுற்றுலா சென்று வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால், அதிகாலை முதலே பழனி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

முருகனின் அறுபடை வீடுகலில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை மூலமாக சென்று சாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர்.

மலைக்கோயிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை, மாதம் ஒரு நாளும், வருடத்திற்கு 45 நாட்களும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம். நேற்று முன் தினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் இன்று காலை ரோப் கார் சேவை தொடங்கியது.

இந்நிலையில் காற்றின் வேகம் காரணமாக மின் வயர்களில் ஏற்பட்ட திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக ரோப் கார் ஊழியர்கள் அறிவித்தனர். இந்நிலையில் ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த 3 மின் ரயில்களில் தற்போது 2 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ரோப் கார் சேவையும் நிறுத்தப்பட்டதால், விடுமுறை நாளான இன்று பழனி கோயிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in