பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை: இருவர் கைது; 22 பவுன் நகை பறிமுதல்

பூட்டிய வீடுகளில் கொள்ளை இருவர் கைது
பூட்டிய வீடுகளில் கொள்ளை இருவர் கைது

தேனி அருகே பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்த இருவரை போலீஸார் கைது செய்து 22 பவுன் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியின் பூட்டிய வீடுகளில் அடிக்கடி கொள்ளை போனது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். தனிப்படையினரும் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில் சிக்கிய இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 22 பவுன் திருட்டு நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் இருவர் மீது வேறேனும் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

துரிதமாக துப்பு துலங்கி கொள்ளையர்களை கைது செய்து, திருடு போன நகை, பணம் ஆகியவற்றை மீட்ட பழனிசெட்டிபட்டி போலீஸார், தனிப்பிரிவினரை தேனி எஸ்பி டோங்ரே பிரவின் உமேஷ் பாராட்டினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in