கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போன் பறிப்பு: ஆட்டோவில் வீடு திரும்பிய முதியவரை பதறவைத்த திருடர்கள்

கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போன் பறிப்பு: ஆட்டோவில் வீடு திரும்பிய முதியவரை பதறவைத்த திருடர்கள்

வெளியூரில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர் ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றவரைப் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் அவரிடம் நூதனமுறையில் கொள்ளையடித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி, தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் ரத்தினம்(60). இவர் தன் குடும்ப உறவினர் ஒருவரது இல்லத்திற்குச் சென்றுவிட்டு நேற்று இரவு தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது தாளமுத்து நகருக்குச் செல்வதற்கு ஒரு ஆட்டோ பிடித்துச் சென்றார். ஆட்டோ தாளமுத்து நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது டூவீலரில் இருவர் வந்தனர்.

அவர்கள் ஆட்டோவை ஓவர்டேக் செய்து வழிகேட்பது போல் நின்றனர். திடீரென ஆட்டோவில் பின்னால் இருந்த ரத்தினத்தின் செல்போனைப் பறித்துவிட்டு கண் இமைக்கும் நொடியில் பைக்கில் சென்றுவிட்டனர். இதுகுறித்து ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அப்பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தனர். இதில் செல்போனை பறித்துச் சென்றது தாளமுத்துநகரைச் சேர்ந்த அந்தோணி சூர்யா, மற்றும் சக்திகுமார் எனத் தெரியவந்தது. போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in