வெளியூர் சென்றிருந்த ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் 8 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

வெளியூர் சென்றிருந்த  ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் 8 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாநகரில் ஷேக்மதார்நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(60). தாசில்தாராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கடந்த 15-ம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று இருந்தார். இன்று காலையில் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அவரும், அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து வந்த பேட்டை போலீஸார், கைரேகை நிபுணர்களுடன் வந்து பீரோ, வீட்டின் கதவில் படிந்திருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியிருக்கும் காட்சியின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. ஓய்வுபெற்ற தாசில்தார் வெளியூர் சென்றிருப்பதை நோட்டம் விட்டே யாரோ கைவரிசை காட்டியிருப்பதாக, அந்தக் கோணத்தில் பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in