பெண் வேடமிட்ட கொள்ளையர்கள் அட்டகாசம்: அலர்ட் செய்த போலீஸ்

பெண் வேடமிட்ட கொள்ளையர்கள் அட்டகாசம்: அலர்ட் செய்த போலீஸ்

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பெண் வேடமிட்டு கொள்ளையர்கள் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பெண் வேடமிட்டு கொள்ளையர்கள் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் பெண் வேடமிட்ட ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடித்து தப்பிக்கும் போது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவரிடமிருந்து ரைஸ் குக்கர், மோட்டார், பித்தளை சாமன்கள் உள்ளிட்ட பல பொருட்களை போலீஸார் மீட்டனர். பிடிபட்ட நபரிடம் விசாரித்த போது, பெண் வேடமிட்டு வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பெண் வேடமிடுவதற்காக அவர் வைத்திருந்த 7 சேலைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பெண் வேடமிட்டவர்கள் யாராவது தெருக்களில் சந்தேகப்படும் இருந்தால் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in