ஏடிஎம்மில் ஒலித்த அலாரம்; அலர்ட்டான வங்கி அதிகாரிகள்: விரைந்த போலீஸால் தப்பிய கொள்ளையர்கள்

கொள்ளையடிக்க முயன்ற ஏடிஎம்..!
கொள்ளையடிக்க முயன்ற ஏடிஎம்..!ஏடிஎம்மில் ஒலித்த அலாரம்; அலர்ட்டான வங்கி அதிகாரிகள்: விரைந்த போலீஸால் தப்பிய கொள்ளையர்கள்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த உள்ளூர், வெளிமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள், தங்களது சம்பள பணத்தை பெறுவதற்கு வசதியாக, இங்குள்ள மிளகாய்தூள் தொழிற்சாலை அருகே எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையம் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை இந்த வங்கியின் ஏடிஎம் மையத்தில் இருந்து அபாய எச்சரிக்கை மணி ஒலித்து கொண்டே இருந்துள்ளது. உடனே வங்கி அதிகாரிகள் சுதாரித்து கொண்டு கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாருக்கு  தகவல் தெரிவித்தனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, ஏடிஎம் மையத்தில் இருந்த மிஷினை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் திருடர்கள் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். போலீஸார் வருவதை பார்த்ததும் 3 பேரும் ஓட்டம் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில் வங்கி அதிகாரிகளின் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 3 மர்ம நபர்களையும் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர். சரியான நேரத்தில் போலீஸார் சென்றதால் ஏடிஎம் மிஷினில் இருந்த ரூ.23 லட்சம் தப்பியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in