நள்ளிரவில் மூதாட்டி வீட்டில் திருட முயற்சி: சிக்கிய வடமாநில கொள்ளையனுக்கு நிகழ்ந்த கொடூர முடிவு!

நள்ளிரவில் மூதாட்டி வீட்டில் திருட முயற்சி: சிக்கிய வடமாநில கொள்ளையனுக்கு நிகழ்ந்த கொடூர முடிவு!

நள்ளிரவில் மூதாட்டி வீட்டில் திருட முயன்ற வடமாநில கொள்ளையனை பொதுமக்கள் சுற்றி வளைத்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த கொள்ளையன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை அருகே கெட்டனமல்லி பகுதியைச் சேர்ந்தவர் வேணுநாயக்கர். இவரது மனைவி வடுவம்மாள் (80). வேணு நாயக்கர் உயிரிழந்த நிலையில், திருமணமாகாத தன்னுடைய இளைய மகள் செல்லம்மாள் மற்றும் கணவரை இழந்த மூத்த மகள் சாந்தியுடன் வடுவம்மாள் வசித்து வருகிறார்.

நேற்று நள்ளிரவில் இவரது வீட்டில் திருடுவதற்காக வடமாநிலத்தைச் சேர்ந்த மூவர் நுழைந்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு வடுவம்மாள் சத்தம் போடவும், திருட வந்த இருவர் தப்பிச் சென்று விட்டனர். மற்றொருவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்.

அந்த நபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த கவரப்பேட்டைபோலீஸார், அந்த நபரை மீட்டு பொன்னேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து தப்பிச்சென்ற 2 வடமாநில கொள்ளையர்களைப் பிடித்தால் தான் இறந்தவர் யார் என்ற விவரம் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in