ஓசியில் தின்பண்டம் கொடுக்க மறுப்பு: தள்ளுவண்டி வியாபாரியை கொடூரமாக கொன்ற போதை வாலிபர்கள்!

கொலை
கொலை

போதையில் தள்ளுவண்டி கடைகாரரிடம் இலவசமாக சாப்பிட பொருள்கள் கேட்டுத் தகராறு செய்த கும்பல், ஒன்று வியாபாரியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் பாரதியார் நகரைச் சேர்ந்தவர் சுருளிவேல்(52). இவர் தள்ளுவண்டியில் ரொட்டி, பன் உள்ளிட்ட தின்பண்டங்களை வைத்து விற்று பிழைப்பு நடத்திவந்தார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மகன் பள்ளியில் படித்து வருகிறார்.

சுருளிவேல் வழக்கம்போல் நேற்று இரவு கம்பம் மெட்டு காலனியில் தள்ளுவண்டி வியாபாரம் செய்துவந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த சில வாலிபர்கள் சுருளிவேலிடம் சாப்பிட இலவசமாகப் பொருள்களைக் கேட்டுத் தகராறு செய்தனர். ஆனால் அவர் அதைக் கொடுக்க மறுக்கவே, உருட்டுக்கட்டையால் சுருளிவேலை சரமாரியாகத் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே சுருளிவேல் பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்கும் கம்பம் போலீஸார் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் 5 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் தள்ளுவண்டி வியாபாரி போதைக் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in