கனஜோராய் கள்ளச்சாராயம் விற்பனை; கண்டுகொள்ளாத காவல்துறை: கொந்தளித்து வீதியில் இறங்கிய மக்கள்!

கனஜோராய் கள்ளச்சாராயம் விற்பனை; கண்டுகொள்ளாத காவல்துறை: கொந்தளித்து வீதியில் இறங்கிய மக்கள்!

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத்தவறிய காவல்துறையை கண்டித்து பொதுமக்கள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை  அருகேயுள்ள சேந்தங்குடி பகுதியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனை நடந்துவருகிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை காவல்துறைக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் வெகுண்டெழுந்த மக்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கள்ளச்சாராய விற்பனையை தடுக்கோரி  சாலை மறியல் செய்தனர். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாததால் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி அன்று நடந்த கிராமசபை கூட்டத்தில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அதன்பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லயாம். அதனால்  இன்று, மயிலாடுதுறை - சிதம்பரம் பிரதான சாலையில், கபிலன் என்பவர் தலைமையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த மயிலாடுதுறை காவல்துறையினர், போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, விரைவில்  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து சுமார் 30 நிமிடம் பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in