லாரி மோதி அப்பளம்போல் நொறுங்கிய மினி வேன்; பறிபோன 6 உயிர்கள்: சென்னை அருகே கோர விபத்து

லாரி மோதி அப்பளம்போல் நொறுங்கிய மினி வேன்; பறிபோன 6 உயிர்கள்: சென்னை அருகே கோர விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கன்டெய்னர் லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே ஜானகிபுரம் என்ற இடத்தில் மினி வேன் ஒன்று இன்று அதிகாலை 15 பேருடன் சென்று கொண்டிருந்தது. ஜானகிபுரம் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மினி வேன் மோதியது. அப்போது, பின்னால் வந்த கனரக வாகனம் ஒன்று மினி வேன் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் இரண்டு லாரிகளுக்கும் இடையில் மின் வேன் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மினி வேன் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in