குற்றாலத்திற்கு இன்பச் சுற்றுலா வந்த இடத்தில் துன்பம்: சென்னை வாலிபர் விபத்தில் பலி

குற்றாலத்திற்கு இன்பச் சுற்றுலா  வந்த இடத்தில் துன்பம்: சென்னை வாலிபர்  விபத்தில் பலி

குற்றாலத்திற்கு சுற்றுலா செல்ல தன் நண்பர்களுடன் வந்த சென்னை வாலிபர் கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

சென்னையைச் சேர்ந்தவர் அசோக்குமார்(28). தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். தீபாவளி விடுமுறையை ஒட்டி நெல்லை, குமரி மாவட்டங்களுக்குச் சுற்றுலா செல்ல அசோக்குமார் முடிவு செய்து இருந்தார்.அவருடன் அவரது சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் மற்றொரு அசோக்குமார், ஆசிக் ஆகியோரும் வந்தனர். முத்லில், பாபநாசம் வந்தவர்கள் அடுத்து குற்றாலம் நோக்கி இன்று காலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.

காரை அசோக்குமார் ஓட்டிவந்தார். அதிகாலை 4 மணி அளவில் கடையம் பகுதியில் கார் வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற புளியமரத்தின் மீது கார் மோதியது. இதில் கார் மிகவும் மோசமாக நொறுங்கியது. இந்தக் கோரவிபத்தில் காரை ஓட்டிவந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் அவரது நண்பர்கள் மற்றொரு அசோக்குமார், ஆசிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுற்றுலா வந்த இடத்தில் சென்னை வாலிபர் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in