30 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி விகிதங்கள் உயர்வு: பொருளாதார மந்தநிலையில் சிக்குகிறதா அமெரிக்கா?

30 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி விகிதங்கள் உயர்வு: பொருளாதார மந்தநிலையில் சிக்குகிறதா அமெரிக்கா?

தொடர்ந்து உயரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அதன் இலக்கு வட்டி விகிதத்தை 0.75 சதவீத புள்ளி அதிகரித்துள்ளது. 1994-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகளவில் உயர்ந்த வட்டி விகிதம் இதுவாகும்.

அமெரிக்காவில் நுகர்வோருக்கான பணவீக்கம் மே மாதத்தில் 8.6 சதவீதத்தை எட்டியதை தொடர்ந்து அமெரிக்க ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. 1981-ம் ஆண்டிற்கு பிறகு மிக அதிகமாக உயர்ந்த பணவீக்கம் இதுவாகும். இந்த பணவீக்கம் காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

0.75% வட்டி விகித உயர்வை அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி, ​​பணவீக்கத்தை இரண்டு சதவீதத்திற்கு திரும்பக் கொண்டுவருவதற்காகவே இத்தகைய சீரமைப்பு பணிகளை செய்வதாகக் கூறியது. இதனால் வரவிருக்கும் மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் மந்தமடையும் என்றும், வேலையின்மை விகிதம் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது.

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித உயர்வு காரணமாக, வங்கிகளின் வட்டி விகிதங்கள் 1.50 சதவீதம் முதல் 1.75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வட்டி விகிதம் 3.4 சதவீதமாகவும், 2023-ல் 3.8 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளனர். அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 1.7 சதவீதத்துக்கு குறைவாக காணப்படுகிறது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் வேலையின்மை 3.7 சதவீதமாக உயரும் என்றும், இது 2024-ல் 4.1 சதவீதமாக இருக்கும் என்றும் அமெரிக்க ரிசர்வ் வாங்கி கணித்துள்ளது.

அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித உயர்வு காரணமாக அமெரிக்கா மற்றும் உலக பங்கு சந்தைகளில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இது இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in