நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடிகள் மோதல்: சினிமா பாணியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்

நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடிகள் மோதல்: சினிமா பாணியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்

சென்னை எம்ஜிஆர் நகரில் நாட்டு வெடி குண்டுகளை வீசி இருதரப்பு ரவுடிகள் மோதிக் கொண்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சமீப காலமாக சென்னையில் ரவுடிகளுக்கிடையே நடக்கும் மோதல் கொலையில் முடிகிறது. கடந்த சில வாரங்களாக மூன்றுக்கும் மேற்பட்டோர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனை உள்ளிட்ட போட்டியின் காரணமாக நடக்கும் இந்த படுகொலைகளைத் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை எம்ஜிஆர் நகரில் நேற்று நள்ளிரவு இரண்டு ரவுடிகள் தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் இருவர் காயமடைந்தனர். எப்போதும் பரபரப்பு நிறைந்த எம்ஜிஆர் நகரில் நடந்த மோதலால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மூன்று பேரை கைது செய்தனர். தப்பியோடிய 30 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in