அதிகாலையில் அதிர்ச்சி... உத்தராகண்ட்டில் நிலநடுக்கம்; மக்களிடையே தொடரும் பீதி

உத்தராகண்ட்டில் தொடரும் நிலநடுக்கம்
உத்தராகண்ட்டில் தொடரும் நிலநடுக்கம்

உத்தராகண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில், தொடரும் நிலநடுக்கங்களால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. கடந்த 5ம் தேதி பித்தோராகர் பகுதியில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பித்தோராகர் நகரில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில், நிலத்தின் மேற்பரப்பிலிருந்து 5 கிலோமீட்டர் ஆழத்தில், நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து உணரப்படும் நிலநடுக்கங்களால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in