பணக்காரர்களுக்கு மட்டும் பெட்ரோல் விலையில் ரூ.100 கூடுதல்!

பாகிஸ்தான் பரிசீலனை
பாகிஸ்தானில் ஒரு பெட்ரோல் பங்க்
பாகிஸ்தானில் ஒரு பெட்ரோல் பங்க்

பாகிஸ்தான் தேசத்தில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையில் லிட்டருக்கு ரூ.100 கூடுதலாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளது.

பொருளாதார சரிவில் ஊசலாடும் பாகிஸ்தான் தேசம், சர்வதேச நாணய நிதியத்தின் கடனை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பில் 6.5 பில்லியனுக்கான பெருந்தொகை பாகிஸ்தானுக்கு கிடைக்க இருக்கிறது. பதிலுக்கு ஐஎம்எஃப் நிர்பந்தங்களுக்கு உடன்படவும் தயாராகி வருகிறது.

பொதுமக்களுக்கான கூடுதல் வரி விதிப்பு, சலுகைகள் மானியங்கள் ரத்து என ஐஎம்எஃப் நிர்பந்தங்களை அமலாக்க பாகிஸ்தான் தடுமாறுகிறது. ஏற்கனவே அதிருப்தியில் ஆழ்ந்திருக்கும் பொதுமக்கள் மத்தியில் இந்த புதிய வரி விதிப்புகள் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என தயங்குகிறது.

எனவே, சாமானியர்களை விட்டு பணக்காரரகளை குறிவைத்திருக்கிறது. அதன்படி அவர்களுக்கான வரி விதிப்பு மற்றும் இதர நிர்பந்தங்களை பரிசீலித்து வருகிறது. அவற்றில் ஒன்றாக அவர்களுக்கு மட்டும், கூடுதல் விலைக்கு எரிபொருளை விற்க முடிவு செய்தது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு பாகிஸ்தான் ரூபாயில் 100 கூடுதலாக விற்கப் போகிறது.

இதன் மூலம் சாமானியர்களுக்கான சலுகை விலையால் நேரும் நிதி இழப்பை எதிர்கொள்ள தீர்மானித்திருக்கிறது. அப்படியே ஐஎம்எஃப் நிபந்தனையையும் ஒரு வகையில் நேர் செய்கிறது. அடுத்த ஆறு வாரங்களில் இந்த புதிய விலை விதிப்பு பாகிஸ்தானில் அமலாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in