ஓய்வுபெற்ற தாசில்தார் சிறைக்குள் திடீர் மரணம்: லஞ்ச வழக்கில் தண்டிக்கப்பட்டவர்!

ஓய்வுபெற்ற தாசில்தார் சிறைக்குள் திடீர் மரணம்: லஞ்ச வழக்கில் தண்டிக்கப்பட்டவர்!

லஞ்ச வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த ஓய்வுபெற்ற தாசில்தார் திடீரென உயிரிழந்தார்.

தென்காசி அருகில் உள்ள மேலகரன் என்ஜிஓ காலனி 8-வ்து தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம்(68). தாசில்தாராக பணியாற்றிய இவர், ஓய்வுபெற்று பத்து ஆண்டுகளாகிகிறது. இவர் வி.கேபுதூர் பகுதியில் தாசில்தாராக பணியாற்றிய போது லஞ்சம் பெற்ற விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருந்தார்.

இதுதொடர்பாக அருணாச்சலம் தொடர்ந்த வழக்கில் நெல்லை நீதிமன்றம் அவரது தண்டனையை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவருக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. இதனால் கடந்த மாதம் அருணாச்சலம் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்றுவந்த அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in